2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு.மாவட்ட புகை பரிசோதனை நிலையங்கள் பரிசோதனை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் நிரந்த மற்றும் நடமாடும் புகை பரிசோதனை நிலையங்களை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

நியமங்கள், சேவைகள், அளவீட்டு அலகுகள் திணைக்கள அதிகாரிகளினால் இந்நிலையங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கல்லடி புகை பரிசோதனை நிலையம் மற்றும் மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிள்ளையாரடி ஆகிய இரு நிரந்த புகை பரிசோதனை நிலையங்களும் வாழைச்சேனை நடமாடும் புகை பரிசோதனை நிலையமும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

எதிர்வரும் தினங்களில் களுவாஞ்சிக்குடி நடமாடும் புகை பரிசோதனை நிலையம் பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

வாகன புகை பரிசோதனை நிலையங்களில் நடைபெறும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே இப்பரிசேதனைகள் நடாத்தப்படுவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X