2025 மே 05, திங்கட்கிழமை

யானைகளை விரட்டுவதற்காக யானை வெடிகள் வழங்க உத்தரவு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக அந்தக் கிராம மக்களுக்கு யானை வெடிகளை வழங்குமாறு உத்தரவிடப்பட்டதாக கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா தெரிவித்தார்.

சின்னவத்தை கிராம மக்களின் குறைநிறைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா அந்தக் கிராமத்திற்கு நேற்று வியாழக்கிழமை சென்றார்.

இந்த நிலையில் சின்னவத்தை கிராமத்தில் வாழும் சுமார் 30 குடும்பங்கள், தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தைப் பற்றியும் காட்டு யானைகளால் தமது வாழ்வாதாரமும் நாளாந்த வாழ்க்கையும் பாதிக்கப்படுவதையும்; எடுத்துக்கூறினர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், வெல்லாவெளி பிரதேச செயலாளர், வனஜீவ திணைக்கள அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சின்னவத்தை கிராம மக்களுக்கு யானைகளை விரட்டுவதற்காக யானை வெடிகளை வழங்குமாறு உத்தரவிடப்பட்டதாக கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X