2025 மே 05, திங்கட்கிழமை

கல்குடா வலயக்கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்குடா வலய கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று ஐனாதிபதியின் ஆலோசகரும் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள
ஐனாதிபதியின் ஆலோசகர் செயலகத்தில் நடைபெற்றது.

வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, கிரான் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்குடா வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்படுத்தலும் க.பொ.த(சாஃத) க.பொ.த(உஃத) பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கும் பாடரீதியிலான பெறுபேறுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிகிருஸ்ணராஜா,  உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி குலேந்திரன், கல்குடா வலயக் கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • கதிரவன் Saturday, 17 August 2013 05:29 AM

    தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கூட்டமா? கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X