2025 மே 05, திங்கட்கிழமை

'தீவிரவாத சக்திகள் மத தீவிரவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'வெளிநாட்டு தீவிரவாத சக்திகள் உள்நாட்டில் மத தீவிரவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்' என மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'சமாதானத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலை உருவாகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிநாட்டு தீவிரவாத சக்திகள் உள்நாட்டில் மத தீவிரவாதத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

இதில் ஒரு கட்டமாகவே பள்ளிவாயல்கள் மற்றும் இந்து ஆலயங்கள், கிறிஸ்த்தவ தேவாலயங்கள் இழிவு படுத்தப்படுகின்றன.

இவ்வாறான செயல்கள் ஒருவரை விட்டு ஒருவர் விலகிச் சென்று மோதலில் ஈடுபடுவதற்கு வழியை ஏற்படுத்தும்.

இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க நாம் அனுமதிக்க கூடாது. இவ்வாறான முறன்பாடுகளுக்கான அடிப்படை காரணங்களில் காணி உரிமைப் பிரச்சினையும் ஒரு காரணமாகும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளிலுள்ள பணம் பின் புலத்தில் செயல்படுகின்றது. இன்னுமொரு மோதலுக்கு நாம் இடமளித்து விடக்கூடாது.

மக்கள் தீவிரவாத சக்திகளுடன் இணைந்து செயற்படாமல் இதய சுத்தியுடன் பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டும். மீண்டும் வன்முறைகள் வெடித்து விடாமல் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த விடயத்தில் கவனமெடுத்து செயல்படுவதுடன் மத தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படக்கூடாது' எனவும் அதில் மேலும் கமலதாஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X