2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  மாவடி ஓடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மரணமடைந்துள்ளார். 

கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மகேஸ்வரராஜா சிவமோகன் (வயது 29) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவர் பயணித்த  மோட்டார் சைக்கிளும் லொறி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதாக  கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி முருகன் ஆலயத்தில் தற்போது உற்சவம் நடைபெறுவதால், அதற்கான இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்டுவிட்டு இந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள்  மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (படங்கள்: எஸ்.எம்.எம்.முர்ஷித்)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X