2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் பற்றியும், எதிர்கால விவசாய அபிவிருத்திகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

மாவட்ட செயலக கேட்பொர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசாங்க அததிபருடன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, 2013 - 2014 பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பக்கூடு;டங்கள் தொடர்பிலும் திகதிகள் அறிவிக்கப்பட்டன. அதன் படி, போரதீவுப் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் பிரதேச செயலகத்தில் செப்டெம்பர் 3ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் செப்ரம்பர் 5ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும்.

மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீரு;ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் செப்டெம்பர் 7ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

ஏறாவூர்பற்று - செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமம், கித்துள்வௌ, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் செப்ரம்பர் 10ஆம் திகதி காலை நடைபெறும்.

கோரளைப்பற்று தெற்கு- கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வாகனேரி, புணானை, தரவை, வடமுனை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் செப்டெம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும்.

கோரளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு, மதுரங்கேணிக்குளம், கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் செப்ரம்பர் 12ஆம் திகதி 10 மணிக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரயநேத்திரன், சி.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கே.துரைராஜசிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, எஸ்.நடராஜா, பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X