2025 மே 05, திங்கட்கிழமை

அடைச்சகல்குளம் புனரமைப்பு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட விவசாயிகளின் நன்மை கருதி அடைச்சகல்குளம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமைவாய்ந்த குளங்களில் ஒன்றாக கருதப்படும் அடைச்சகல்குளம் கடந்த 30 வருடங்களாக எதுவித புனரமைப்பும் செய்யப்படாத நிலையிலேயே இருந்துவந்தது.

இந்த குளத்தின் மூலம் நீர் ஏந்து காலங்களில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்த குளத்தினை புனரமைத்து தருமாறு இப்பிரதேச விவசாயிகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் கமநல அபிவிருத்தி, விவசாயத்துறை அமைச்சினால் இந்தக்குளம் புனரமைக்கப்படவுள்ளது.

வவுணதீவு பிரதேசத்தில் சுமார் 12ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை காணிகள் உள்ளதுடன் நீர்பற்றாக்குறை காரணமாக சுமார் 1000 ஏக்கரிலேயே நெற்செய்கைகள் செய்கை பண்ணப்படுகின்றது.

இந்த குளம் புனரமைப்பு செய்யப்படுவதன் மூலம் சுமார் 1000 ஏக்கரில் நெற்செய்கை பண்ணமுடியும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த குளத்தின் புனமைப்பு பணிகள் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அடைச்சகல் குளத்தினை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட பிரதியமைச்சர் அந்த குளத்தினை புனரமைப்பது குறித்து அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின்போது கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் சிவலிங்கம், மீள்குயேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தன், மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட அதிகாரிகள் பலரும் இணைந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X