2025 மே 05, திங்கட்கிழமை

அரசாங்க ஊழியர்களுக்கு சிங்களமொழிப் பயிற்சி முகாம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 60 அரசாங்க ஊழியர்களுக்கான சிங்களமொழிப் பயிற்சி முகாம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றுவரும் இந்த சிங்களமொழிப் பயிற்சி முகாமில் வாழைச்சேனை பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், கல்குடா கல்வி வலயம், கோறளைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட அரசாங்க ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சிங்களமொழிப் பயிற்சி முகாம் தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இந்தப் பயிற்சிநெறியின் முடிவில் பரீட்சை நடத்தப்படவுள்ளதுடன், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர்.ஹேரத் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்ப நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர்.ஹேரத், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'தேசத்திற்கு மகுடம்' திட்டத்தில் அரச மொழிக் கொள்கை அமுலாக்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கான சிங்களமொழிப் பயிற்சி முகாம் ஒன்றை  தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்; நடத்தி வருகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X