2025 மே 05, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களுக்கான நடைமுறையை தளர்த்த ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் அமர்ந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையை இல்லாமல்ச் செய்வதற்கு  கோரவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற  கூட்டத்திலேயே இவ்வாறு கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் அமர்ந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்துச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களின்; பின் ஆசனத்தில் அமந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்துப் பயணிக்க வேண்டும் என்ற  நடைமுறையை இல்லாமல்ச் செய்து, வழமைபோன்று ஒரு பக்கம் பெண்கள் கால்களை வைத்து மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்யும் நடைமுறையை அமுல்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் பெண்களின் கலாசார உடை,  கர்ப்பிணித்தாய்மார் போன்றவர்கள் மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் அமர்ந்து செல்லும்போது இரண்டு பக்கமும் கால்களை வைத்துப் பயணிப்பதால் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெண்கள் மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் அமர்ந்து செல்லும்போது இரண்டு பக்கமும் கால்களை வைத்துப் பயணிக்க வேண்டும் என்ற நடைமுறையை இல்லாமல்ச் செய்ய வேண்டும் என்று பொலிஸாரை கோருவதற்கும் இதனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி  பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பிப்பது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், கே.துரைராஜசிங்கம், இரா.துரைரத்தினம், பிரசன்னா இந்திரகுமார், கோவிந்தன் கருணாகரன் ஜனா, காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X