2025 மே 05, திங்கட்கிழமை

குடிநீர் இணைப்புக்களை பெறுவதற்கான கொடுப்பனவு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான உதவிக் கொடுப்பனவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தினால் குடிநீர் இணைப்புக்களை பெறுவதற்காக வழங்கும் உதவித் திட்டத்தின் கீழ் இந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 194 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான உதவிக் கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன், காத்தான்குடி பிரதேசத்தின் கரையோரப் பகுதியிலுள்ள 6 பள்ளிவாசல்களுக்கும் குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான  உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

இவ்வருட இறுதிக்குள் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மேலும் 1,200 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் சவூதி அரேபிய நாட்டின் நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அபூசாலிஹ் ஹாலித் அத்தாவூத், சவூதி அரேபிய அப்ஹா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஷ்ஷெய்க் ரஸீன் ஹசன் அல்மயிதி, ஸ்ரீலங்கா ஹிறா பவண்டேசன் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பணி;ப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.மும்தாஸ் மதனீ, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X