2025 மே 05, திங்கட்கிழமை

சுயதொழில் முயற்சிக்காக தைய்யல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் சுயதொழில் முயற்சிக்காக தைய்யல் இயந்திரங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

ஏறாவூர் இமாம் கஸ்ஸாலி நிறுவனத்திற்கே 20 தைய்யல் இயந்திரங்களை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் வழங்கிவைத்தார்.

ஏறாவூர் இமாம் கஸ்ஸாலி நிறுவனம், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த தைய்யல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஏறாவூர் மதரசா மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்   கிழக்கு மாகாண அமைச்சர்களான ஹாபீஸ் நசீர் அஹமட், விமலவீர திஸாநாயக்க,  கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பத்மராஜா, கிழக்கு மாகாண கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் எஸ்.தென்னக்கோன், ஏறாவூர் இமாம் கஸ்ஸாலி நிறுவனத்தின் தலைவரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம்.பெரோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X