2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு ஏதிராக ஆளுநரிடம் முறைப்பாடு

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சேவை பிரமாணங்களுக்கும் ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கும் முரணான வகையில் நியமனங்களை வழங்கி வருவதாக  இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சேவைப் பிரமாணங்களுக்கும் ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கும் முரணாக நியமனங்களை வழங்கியுள்ளதைக் சுட்டிக்காட்டி  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளர் பொ. உதயரூபன் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவிற்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"1225/32 இலக்கமிடப்பட்ட கல்வி நிருவாக சேவை பிரமாணங்களுக்கு முரணாக சேவை மூப்பினை கருத்திற்கொள்ளாமலும்  மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 1589/30 இலக்கமிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி 29ஆம் பிரிவிற்கு முரணாக வலய பிரதிக் கல்விப்பாளார் (நிருவாகம்) பதவிக்கு கல்குடா வலயத்தில் நியமிக்கப்ட்டுள்ளார் (விஷேட ஆளணிக் கோப்பு)

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியர் தரம் 2ஐச் சேர்ந்த ஒருவர் நாடகமும் அரங்கியலும் பாடத்திற்குரிய உதவிக் கல்விப் பணிப்பாளராக 2012முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். ஏறாவூர்ப் பற்று கோட்டக் கல்வி அதிகாரியின் நியமிப்பு சேவை மூப்பு கல்வித் தகைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டத்தில் வகிமா/கஅ/2004/01 இலக்கமிடப்பட்டதும் 2004/09/07 திகதியிடப்பட்ட மாகாண கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாக மாகாண கல்வி அமைச்சின் நிருவாகத்திலுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரின் அதிபர் 1AB பாடசாலைக்குரிய கல்வித் தகைமையற்றவராக சுமார் 30 வருடங்களாக சேவை புரிவதோடு அவரின் சேவை நீடிக்கப்பட்டுள்ளார்.

சேவைமூப்பு, கல்வித் தகைமை கருத்திற்கொள்ளாமல் நியமிப்புச் செய்யப்பட்டுள்ள ஏறாவூர்ப்பற்று கோட்ட கல்வி அதிகாரியின் நியமனம் மற்றும் பாடசாலைகளில் தரத்திற்கும் அதிபர்களின் தரம் கல்வித் தகைமைகளுக்கு ஏற்ப அதிபர்கள் நியமனங்கள் மேற்கொள்ளப் வேண்டும்.

தங்களால் வெளியிடப்பட்ட சட்ட தொகுப்பின் 1990ஆம் ஆண்டின் 28ம் இலக்க மாகாண திருத்தச் சட்டத்தின் 4 இன்படி சட்ட விதிகளுக்கு அமையவும் நியாய பூர்வமாகவும் உண்மைத் தன்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனுமான நியமிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு தக்க நடவடிக்கையெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழவின் செயலாளர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X