2025 மே 05, திங்கட்கிழமை

கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு, பாலமீன்மடு பகுதியில் இடம்பெற்ற இளைஞர் ஒருவரது கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைதான மூவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சீமெந்துக் கல் உற்பத்தி நிலையம் ஒன்றில் வைத்து 175ஃ2 புதிய எல்லை வீதி பாலமீன்மடுவில் வசிக்கும் 23 வயதான சுந்தரலிங்கம் சுமன் என்பவரது சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்புப் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக விசாரணையினை மேற்கொண்ட மட்டக்களப்புப் பொலிஸார் சந்தேசத்தின் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த சுவேந்திரன் சுதாகரன்,அருண கிரிநாதன் கௌரிசங்கர், மகாலிங்கம் சரவணபவான் ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பான செயின் பொருத்தப்பட்ட வெற்றன் பொல் இரண்டையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் மூவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது மூவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X