2025 மே 05, திங்கட்கிழமை

மானை சுட்டவருக்கு பிணை

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீயான்கு hட்டுப் பகுதியில் இன்று மான் ஒன்றை சுட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மீயான்குளக் காட்டுப் பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பை ஏற்படுத்திய பொலிஸார் கொல்லப்பட்ட  மானையும் குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க விசாரனைகளை மேற்கொண்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி சந்தேக நபர் குற்றத்தினை ஏற்றுக் கொண்டதற்கிணங்க ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X