2025 மே 05, திங்கட்கிழமை

இன விகிதாசாரத்தை குறைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


'மட்டக்களப்பு மாவட்டத்திலே இன விகிதாசாரத்தினைக் குறைப்பதற்குரிய முனோடி எச்சரிக்கையாகவும், அதிரடியான ஒரு நடவடிக்கையாகவும்தான் மாவட்டத்தில் அத்துமீறிய குடியேற்றங்களும் காணி அபகரிப்புக்களும் இடம்பெற்று வருகின்றன' என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

'21 வீடுகளுக்கு நிரந்தர அத்திவாரமிட்டு பௌத்த மதகுரு வீடுகளைக் கட்டிக்கொண்டு வருகின்றார். இது மட்டக்களப்பு மாவட்டத்திலே இன விகிதாசாரத்தினைக் குறைப்பதற்குரிய முனோடி எச்சரிக்கையாகும். இது அதிரடியான ஒரு நடவடிக்கை என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, பட்டிப்பளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்ட காணி அபகரிப்பு மற்றும் அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பட்டிப்பளை பிரதேச செயலாளரிடம் மகஜரினை கையளித்து விட்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்  

'அத்துமீறிய குடியேற்றங்கள் பட்டிப்பளை பிரதேசத்தின் கெவுளியாமடு பகுதியில் இடம்பெற்று வருகின்றன. அதனை விட அத்துமீறிய காணி சுவீகரிப்புக்களும் நடைபெற்று வருகின்றன. இவைகளனைத்திற்கும் பௌத்த மதகுரு ஒருவர் பின்புலத்தில் இருந்து செயற்பட்டு வருகின்றார்.

தற்போதும் கூட அந்தப் பகுதியில் 21 வீடுகளுக்கு நிரந்தர அத்திவாரமிட்டு பௌத்த மதகுரு வீடுகளைக் கட்டிக்கொண்டு வருகின்றார். இது மட்டக்களப்பு மாவட்டத்திலே இன விகிதாசாரத்தினைக் குறைப்பதற்குரிய முனோடி எச்சரிக்கையாகும். இது அதிரடியான ஒரு நடவடிக்கை என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.

எது, எப்படி இருந்தாலும் யாராக இருந்தலும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும், நீதிமன்றத்திற்கு அடிபணிய வேண்டும் ஆனால் இங்கு எதுவும் நடப்பதாக இல்லை  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எடுக்கப்பட்ட நீதிமன்றக் கட்டளைகூட இங்கு அமுலாக்கம் செய்யப்படவில்லை இதற்குத் துணைபோகின்றவர்கள் யார்? பௌத்த மத குருவானவரா அல்லது மக்களா? என்பதனை நாங்கள் அறிய வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

தயவு செய்து யாராக இருந்தலும் நீங்கள் காணிச் சட்டத்தினை அமுலாக்குங்கள், அத்துமீறிக் குடியேறுபவர்களைத் தடுத்து நிறுத்துங்கள், அவர்கள் அங்கே அத்துமீறிச் செய்கின்ற வேலைகளைக் கட்டுப் படுத்துங்கள் என்ற பலகோரிக்கையினை முன்வைத்து நாங்கள் இந்த மகஜரைக் பிரதேச செயலாலளரிடம் கையளிக்கின்றோம்.

இந்த மகஜரின் பிரதியொன்றை நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கொடுக்க இருக்கின்றோம்'  என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X