2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் இராணுவ வீராங்கனை காயம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கதிரவெளி கல்லுமலை பகுதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் இராணுவ வீராங்கனை ஒருவர் காயமடைந்துள்ளார்.

கதிரவெளி - திருகோணமலை பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் வண்டி ஒன்றும்  அறுவடை இயந்திர வண்டி ஒன்றும் நேருக்குநேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செயலமர்வு ஒன்றுக்காக இராணுவ வீராங்கனைகளை  ஏற்றிக்கொண்டு திருகோணமலையிலிருந்து தெஹ்யத்தகண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியும்  வயல் அறுவடைக்காக மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த அறுவடை இயந்திரமுமே இவ்வாறு மோதி விபத்திற்கு உள்ளானதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் வாகரை 233ஆவது இராணுவ படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X