2025 மே 05, திங்கட்கிழமை

மின் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று புதன்கிழமை மாலை  பூச்சு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவர் மின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

ஆரையம்பதி செல்வா நகரைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான வி.யோகராஜா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுச்சுவருக்கான பூச்சு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இவர் மீது  மின் தாக்கியதைத் தொடர்ந்து மயங்கிக் கீழே  விழுந்துள்ளார். இந்த நிலையில்,  இவரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தபோது இவர் வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X