2025 மே 05, திங்கட்கிழமை

வின்சன்ட் டி போல் அமைப்பின் சர்வதேச தலைவர் மட்டு.விஜயம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


இலங்கையின் வறுமை நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதார மேம்பாடு உட்பட பல உதவிகளை மேற்கொண்டுவரும் வின்சன்ட் டி போல் அமைப்பின் சர்வதேச தலைவர் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ளார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.

இவரை வரவேற்கும் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட வின்சன்ட் டி போல் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை டயஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வின்சன்ட் டி போல் அமைப்பின் சர்வதேச தலைவர் மைக்கல் தியோ, அமைப்பின் தெற்காசிய இணைப்பாளர் கப்ரீல் மண்டோல், இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி லியோனி பெர்னாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வின்சன்ட் டி போல் அமைப்பின் கீதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்ட ஒலிப்பேழையும் இதன்போது வெளியிட்டுவைக்கப்பட்டது.

வின்சன்ட் டி போல் அமைப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 100 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வறிய மக்களின் நலனை அடிப்படையாகக்கொண்டு சர்வதேச ரீதியில் தனது சேவையை மேற்கொண்டுவரும் வின்சன்ட் டி போல் அமைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கு, கடந்த கால யுத்த சூழ்நிலை மற்றும் சுனாமி அனர்த்தங்களின்போது பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டுள்ளது.

வறியவர்களின் வாழ்வாதார திட்டம், வறிய மாணவர்களுக்கான கல்வி வசதி, வறிய மக்களுக்கான வீடமைப்பு திட்டம், கழிவறை திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றது.

இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X