2025 மே 05, திங்கட்கிழமை

ஏறாவூர் நகரை இயற்கை இடர்களிலிருந்து பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரை இயற்கை இடர்களுக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய நகராக பாதுகாப்பதற்கான திட்டவரைவைத் தயாரிக்கும் செயலமர்வொன்று நடத்தப்பட்டது.

வருடா வருடம் ஏறாவூர் நகரத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் ஏற்படக்கூடிய பெருவெள்ளம் மற்றும் ஏனைய சூழல் பாதிப்புக்களுக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் ஏறாவூர் நகரை பாதுகாப்பதற்கு திட்டவரைபு தயாரிக்கப்படவுள்ளது.

ஏறாவூர் நகர சபை, பிரதேச செயலகம், நகர அபிவிருத்தி அதிகார சபை போன்றவை இணைந்து இந்த திட்டவரைபை தயாரிக்கும்  இறுதிக்கட்ட செயலமர்வை பூர்த்தி செய்துள்ளன.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் ஏறாவூர் நகரபிதாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இச்செயலமர்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எல்.டி.கம்மி,  பிரக்ரிக்கல் அக்ஸன்  நிறுவனத்தின் ஆலோசகர் நிலந்தகுமார, ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.தஸ்லீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X