2025 மே 05, திங்கட்கிழமை

பாதை போக்குவரத்தில் பல்வேறு குறைபாடுகள்: பயணிகள் விசனம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மண்முனைத்துறை வாவியில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பாதையில்(படகில்) பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மண்முனைத்துறை வாவியில் இருந்து படுவான்கரைக்குச் செல்லும் மக்களே இவ்வாற தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இத்துறையில் இரண்டு பாதைகள்(படகுககள்) பயன்படுத்தப்படுகின்றன. அவை இரண்டம் அரை மணித்தியாலத்திற்கு ஒன்று என்ற முறையில் சேவையில் ஈடுபடுகின்றன.

இதனால், தினமும் நோயாளர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார் உட்பட பொதுமக்கள் பாதைக்காக (படகுக்காக) பல மணிநேரங்கள் காத்து நிற்கவேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இவை இரண்டிலும் ஒரு பாதை பழுதடைந்தால் இன்னும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வெயில் காலத்திலும்; கடும் வெப்பத்திலும் மழை காலத்தில் மழையில் நனைந்தும் இங்கு காத்து நிற்க வேண்டியுள்ளது. கைக்குழந்தைகளுடன் தாய்மார் இந்த பாதைக்காக (படகு) காத்து நிற்கின்றனர்.

இவர்களுக்காக இங்கு போதிய அளவு தரிப்பிடங்களும் இல்லாமலுள்ளது.

இங்கு சேவையில் ஈடுபடும் பாதை(படகு) அடிக்கடி தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுமானால் இந்த சிரமங்களை தவிர்க்க முடியுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சில நேரங்களில் இந்த பாதை(படகு) துறையில் நேர்த்தியாக நிறுத்தப்படாமல் குறுக்காக நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் தமது மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள் உட்பட வாகனங்களை ஏற்றுவதற்கும் சிரமப்படுகின்றனர்.

இந்த மண்முனைத்துறை பாலத்திற்கான நிர்மாண வேலைகள் மிக துரிதமாக இடம்பெற்றுவருதால் இந்த பாலத்தின்; நிர்மாண வேலைகள் முடியும்வரை இந்த வாவியினூடான பாதை(படகு) போக்கு வரத்தில் சிரமம் இருக்குமெனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இந்த வாவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மண்முனைத்துறை பால நிர்மாண வேலைகள் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு மே மாத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாதை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழுதடைந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X