2025 மே 05, திங்கட்கிழமை

காணிக்கச்சேரிகள் தொடர்பான நடமாடும்சேவை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் தெற்கு மற்றும் வடக்கு கிராமங்களில் நேற்று வியாழக்கிழமை காணிக்கச்சேரிகள்  தொடர்பான நடமாடும்சேவை நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரனிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் மண்முனை இந்த நடமாடும் சேவை நடத்தபட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் தெற்கு மற்றும் வடக்கு, நாவற்குடா கிழக்கு போன்ற கிராமங்களில் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திலும் ஏனைய பொதுகட்டிடங்களிலும் இந்த காணிக் கச்சேரி நடமாடும் சேவைகள் இடம்பெற்றன.

காணி உத்தியோகத்தர் எஸ்.செழியன் தலைமையில் நடைபெற்ற இக்காணி கச்சேரியில் அதன் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நடமாடும் காணிக்கச்சேரி சேவையில் காணி உறுதிப்பத்திர பிரச்சினைகள், உரிமம் மாற்றம், காணி போர்மிட் உட்பட காணி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவைகள் தீர்த்து வைக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X