2025 மே 05, திங்கட்கிழமை

துப்பாக்கியும் இரவைக் கூடும் செங்கலடியில் மீட்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  கரடியனாறு பிரதேசத்தில் ரி-56 ரக துப்பாக்கியும் இரவைக் கூடும் நேற்று வியாழக் கிழமை மாலை மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மயிலவெட்டுவான் முருகன் கோயில் பகுதியை அன்மித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த போதே இவைகள் மீட்க்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது ரீ-56 துப்பாக்கி--01    இரவைக் கூடு -01.    இரவைகள் -30. போன்றவை மீட்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இவைகள் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரினால் நாசகார வேலைகளுக்காக பயன்படுத்துவதற்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முடிவுற்றதும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஒப்படைப்பதற்;கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக மேலும் பொலிசார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X