2025 மே 05, திங்கட்கிழமை

புதிய காதி நீதிபதி கடமைகளை பொறுப்பேற்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி, காதி நீதிமன்றத்தின் புதிய காதி நீதிபதியாக நியமிக்கப்பட்ட மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தனது காதி நீதிபதி கடமைகளை நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

காத்தான்குடி டீன் வீதியிலுள்ள காதி நீதிமன்றத்தில் குர் ஆன் வசனங்களை ஓதி தனது கடமைகளை இவர் ஆரம்பித்தார்.

இந்த வைபவத்தில் காத்தான்குடியின் முன்னாள் காதி நீதிபதி எம்.பி.எம்.மீராசாகிபு, காத்தான்குடி கதீப் மார் இமாம்கள்
சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை, அதன் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X