2025 மே 05, திங்கட்கிழமை

மத்தியஸ்த்த சபைக்கு உறுப்பினர்கள் நியமனம்

Super User   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே இந்த நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மத்திய சபையின் புதிய தவிசாளர் எஸ்.விஸ்னுமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவத்தில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கனகா சிவபாதசுந்தரம் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் அத்தயட்சகர் ஜயந்த ரத்னாயக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மத்தியஸ்த்த சபையில் அடுத்த மூன்றாண்டுகள் கடமையாற்றுவதற்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட 38 உறுப்பினர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X