2025 மே 05, திங்கட்கிழமை

செம்மண்ணோடை சிறுவன் கொலை சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Super User   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

செம்மண்ணோடை சிறுவனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த மீராலெப்பை முஹம்மட் ஹிமாஸ் என்ற சிறுவனின் கொலையுடன் சம்மந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளாh. கொலை செய்யப்பட்ட சிறுவனும் சந்தேகநபரான சாகுல் ஹமீட் அலி அக்பரும் கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி செம்மண்ணோடையில் இருந்து துவிச்சக்கர வண்டியில் ஓட்டமாவடிக்கு வந்துள்ளனர்.

ஓட்டமாவடியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருவரும் தேனீர் அருந்திவிட்டு மடுவத்து வீதியில் ஆற்றங்கரை ஓரமாக சென்று சிறுவனை தனது இச்சைக்கு குறித்த சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளார். பின்னர் சிறுவனும் சந்தேகநபரும் ஆற்றங்கரையோரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறுவன் சந்தேகநபருக்கு சுரி மண்ணை அள்ளி எரிந்ததுள்ளார்.

பின்னர் சந்தேகநபர் சிறுவனுக்கு கல்லால் எரிந்துள்ளார். இதன்போது அது தலையில்பட்டதும் அவர் மரணித்து விட்டார்.  அதன் பின்னர் அச்சிறுவனின் உடலை மறைத்து வைக்கும் நோக்கில் மதில் ஓரமாக வைத்து அதன் மேல் பெரிய கற்களைத் தூக்கிப் போட்டதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேக சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை முடிவடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு முன்னாள் ஆஜர் படுத்தப்படவுள்ளார்" என அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • mattakkalappaan Sunday, 25 August 2013 12:36 PM

    இப்படிப்பட்ட கெட்டவர்கள் புழுத்து சாகனும்..!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X