2025 மே 05, திங்கட்கிழமை

மின் தாக்கி இளைஞர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மின்சாரம் தாக்கி 25 வயதான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்த இளைஞர் மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முகம்மது ஆசிக் (வயது 25) என்பவரே மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞர் பின்னர் அங்கிருந்து   மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X