2025 மே 05, திங்கட்கிழமை

மத்திய கிழக்கு நாடுகளில் விபத்து, சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மூவருக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மத்திய கிழக்கு நாடுகளில் விபத்து மற்றும் சித்திரவதையினால்  பாதிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி நடவடிக்கைகளுக்கான முகாமையாளர் எஸ்.அநுரகுமார தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சஹன வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊரியங்கட்டு கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் பவாணி, ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராகேணி கிராமத்தைச் சேர்ந்த எம்.எம்.ஐ.பர்வீன்,  ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த சச்சிதானந்தன் தர்சானந்தன் ஆகியோருக்கு இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிதியுதவியுடனும்; தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப ஆலாசனையுடனும்  இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றனவெனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு வீடும் 500,000 ரூபா பெறுமதியுடையதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி நடவடிக்கைகளுக்கான முகாமையாளர் எஸ்.அநுரகுமார  தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X