2025 மே 05, திங்கட்கிழமை

இளைஞர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆஸி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள் மற்றும் பிளான் ஸ்ரீலங்கா நிறுவன அதிகாரிகள் வவுணதீவுப் பிரதேச இளைஞர், யுவதிகளைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

வவுணதீவுப் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் மா.சசிகுமார் தலைமையில், நெல்லூர் நடேசா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (24) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள், இந்தியாவிற்கான அவுஸ்ரேலியத் தூதரக அதிகாரி, பிளான் ஸ்ரீலங்கா இலங்கைக்கான பிரதிநிதி எட்வாட் நெட் எஸ்.பி, பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் டேவிட் சதானந்தம், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், பிளான் ஸ்ரீலங்கா நிறுவன மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் செல்வி க.வன்னிரமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வவுணதீவுப் பிரதேச இளைஞர்கள் சார்பாக வவுணதீவுப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனப் பிரதிநிதிகள், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர், இளைஞர் கழகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X