2025 மே 05, திங்கட்கிழமை

எல்லைக்கிராமங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான பாலையடி வேட்டை மற்றும் புதுமுன்மாதிரிச்சோலை ஆகிய கிராமங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விஜயம்செய்தார்.

இதன்போது அவர், கிராம மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது அவர், அக்கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும்; வழங்கி வைத்தார்.

இக்கிராமங்கள் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டவை என்பதுடன் யாணைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளான பிரதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X