2025 மே 05, திங்கட்கிழமை

ஆரையம்பதி சந்தைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எம்.எம்.நூர்தீன்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சந்தைக் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் இன்று புதன்கிழமை காலை நாட்டி வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'புறநெகும' திட்டத்தின் கீழ் சுமார் 14 இலட்சம் ரூபா செலவில் இந்த சந்தைக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சத்தியானந்தி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம், கிழக்கு மாகாண சபையி;ன் முன்னாள் உறுப்பினர் பி.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மண்முனைப்பற்று பிரதேச சபையினால் இந்த சந்தைக்கட்டிட நிர்மாண வேலைகள் இடம்பெறவுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X