2025 மே 05, திங்கட்கிழமை

'ஒற்றுமை மிக்க இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்' பேரணி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.எம்.நூர்தீன், மாணிக்கப்போடி சசிகுமார், ஜவர்பர்கான், தேவ அச்சுதன்


'ஒற்றுமை மிக்க சகோரத்துவத்துடன் இணைந்த ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம'' எனும் தொனிபொருளிலான பேரணியொன்று புதன்கிழமை (28) மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.

இதில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வரும் நான்கு நாள் சமூக ஒருமைப்பாட்டு இளைஞர் பாசறையை முன்னிட்டு நடைபெற்ற இந்த நடை பவனியில், தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கச்சேரி முன்பாக ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்திடி ஊடாக சென்று மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நிiவுபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்ட விசேட மேடையில் பொதுக் கூட்டமொன்றும் நடைபெற்றது.

அங்கு அமைச்சர் வாசுதேவ நாயணக்கார, பிரதி அமைச்சர் வி.முரளிதரன் ஆகியோர் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டமொன்றும் நடைபெற்றது.









You May Also Like

  Comments - 0

  • அப்பாவி Wednesday, 28 August 2013 03:57 PM

    மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் அவர்கள் இதில் கலந்துகொள்ளாதது ஏனோ? வேலைப்பளுவா வேறு ஏதுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X