2025 மே 05, திங்கட்கிழமை

இலங்கையில் மனித உரிமைகள், சுதந்திரமான சூழல்கள் சிறப்பாக உள்ளன: முரளிதரன்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையை வரவேற்கின்றேன். இங்குள்ள உண்மை நிலவரத்தை அறிய இது அவருக்கு வாய்ப்பாக அமையும். இதேவேளை, இலங்கையில் மனித உரிமையும் மக்களுக்கான சுதந்திரமான சூழலும் சிறப்பாகவே காணப்படுகின்றது' என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் ஓற்றுமை மிக்க சகோரத்துவத்துடன் இணைந்த ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தலைப்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பேரணி பொதுக் கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மேற் கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன், 'ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்போது இலங்கை வந்துள்ளதை நாம் வரவேற்கின்றோம். அவரின் வருகையானது இங்குள்ள உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். இலங்கையில் மனித உரிமையும் மக்களுக்கான சுதந்திரமான சூழலும் சிறப்பாக காணப்படுகின்றது.

வட மாகாணசபை தேர்தல் நடைபெறாது என்று சிலர் கூறினார்கள் ஆனால் வட மாகாண சபை தேர்தல் நடைபெறப்போகின்றது. சுதந்திரமாக அந்த தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதியாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளார். இவர் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் குரல் கொடுத்து வருகின்றார்.

இவ்வாறான சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கும் சூழ்நிலை இங்கு ஏற்பட்டுள்ளது. மொழியை விருத்தி செய்வதற்கும் மொழிகளின் மூலம் சமூகங்களை இணைப்பதற்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முயற்சித்து வருகின்றார்.

அமைச்சர் வாசுதேவ நாணய்ககாரவின் ஐம்பது வருடகால அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரு அரசியல் வாதியாக அவர் காணப்படுகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • AJ Wednesday, 28 August 2013 09:25 AM

    நாய் வேலையை நாய் மட்டும் தான் பார்க்க வேண்டும். முஸ்லிம் பள்ளிவாசலில் புகுந்து அப்பாவி மக்களை கொன்றவர்களை முதலில் கைது செய்யவேண்டும். அந்த சம்பவத்தாலேயே தமிழர்களும் முஸ்லிம் மக்களுக்கும் ஒரு பகை உருவாக்கியது.

    Reply : 0       0

    VALLARASU. Wednesday, 28 August 2013 04:33 PM

    நாட்டில் மனித உரிமை மீரலுக்கு அடிப்படை காரணம் நீங்களும் ஒருவரே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X