2025 மே 05, திங்கட்கிழமை

பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் காணிக் சச்சேரி

Super User   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளுகுனாவ மற்றும் கெவிலியாமடு பிரதேசங்களில் நிலவி வரும் காணி பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான காணிக் சச்சேரி நடமாடும் சேவையொன்று இன்று வியாழக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த காணிக் கச்சேரியில் காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ மற்றும் பிரதி காணி ஆணையாளர் அசந்த குணசேகர, மாகாண காணி ஆணையாளர் கே.ஆர்.டி.பி.ஐ.விஜேதிலக, பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரட்ணம் உட்பட காணி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த காணிக் கச்சேரி நடமாடும் சேவையில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளுகுனாவ மற்றும் கெவிலியாமடு போன்ற பிரதேசங்களில் இருந்து பெருமளவிலான தமிழ் மற்றும் சிங்கள மக்கள் கலந்துகொண்டனர். இதன்போது காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அதன் அதிகாரிகள் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் இந்த காணிப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான விண்ணப்பப் படிவமொன்று வழங்கப்பட்டது.

இந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து எதிர்வரும் புதன்கிழமைக்கு முதல் பட்டிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ தெரிவித்தார். இதையடுத்து வருகை தந்த பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவமொன்று வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X