2025 மே 05, திங்கட்கிழமை

நோயாளியின் கையடக்கத்தொலைபேசி திருட்டு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்த நோயாளி ஒருவரின் கைய்யடக்கத் தொலைபேசி மற்றும் பணம் என்பன நேற்று வியாழக்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 4ஆம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வயோதிபரின் நலன்களை கவனிப்பதற்காக தான் நிற்பதாக கூறி அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரே நோயாளியின் கையடக்கத்தொலைபேசி மற்றும் அவரது செலவுக்காக வைத்திருந்த பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சிகிச்சை பெற்றுவரும் குறிப்பிட்ட வயோதிப நோயாளியிடம் விசாரித்தபோது தனக்கு அருகில் நின்றவரை தெரியாது எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி வைத்தியரிடம் உரியவர் முறையிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X