2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலை வெளிவாரி பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு பலக்லைக்கழகத்தின் வெளிவாரி பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கிழக்கு பலக்லைக்கழகத்தின் பதிவாளர் எம்.மகேசன் தெரிவித்தார்.

கிழக்கு பலக்லைக்கழக நல்லையா மண்டபத்தில் இதன் வைபவம் நடைபெறவுள்ளது.

இதில் 87 வெளிவாரி பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

கலைப்பிரிவைச் சேர்ந்த 34 பட்டதாரிகளுக்கும், வியாபார விரிவாக்கம் பிரிவைச் சேர்ந்த 19 பட்டதாரிகளுக்கும், வணிகப்பிரிவைச் சேர்ந்த 2 பட்டதாரிகளுக்கும், கிழக்கு பலக்லைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திலுள்ள விஞ்ஞான முகாமைத்துவ பட்டதாரிகள் 22 பேருக்கும், அதே வளாகத்திலுள்ள கலைப்பிரிவைச் சேர்ந்த 10 பட்டதாரிகளுக்கும் இந்த பட்டசான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு பலக்லைக்கழகத்தின் பதிவாளர் எம்.மகேசன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X