2025 மே 05, திங்கட்கிழமை

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன் கைது

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்  ஒருவரே இவ்வாறு சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றைக் கையாள்வதற்காக நபர் ஒருவரிடமிருந்து இரண்டாயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற வேளையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பொலிஸ் சார்ஜன்ற் முறைப்பாட்டாளர்களிடமிருந்து இலஞ்சம் பெறுவதாக ஏற்கெனவே இலஞ்ச ஊழல் ஒழிப்பு  ஆணைக்குழு அதிகாரிகளுக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X