2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்புக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வர்தன் குமார் சிங்ஹா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது மட்டக்களப்பு விஜயத்தின்போது இந்திய - இலங்கை நட்புறவின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு
வரும் இந்திய வீடமைப்புத் திட்டங்களை பார்வையிடவுள்ளார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கடமையேற்ற பின்னர் முதற்தடவையாக கிழக்குக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள இவர், மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்திக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்களகம எனும் சிங்கள மக்கள் வாழும் கிராமத்திலும் பெரியபுல்லுமலை எனும் தமிழ் மக்கள் வாழும் கிராமத்திலும் உறுகாமம் எனப்படும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் கலந்து வாழும் கிராமத்திலும் இந்திய வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்திய உயர்ஸ்தானிகரின் மட்டக்களப்பு விஜயத்தின்போது வீடமைப்புத் தவிர்ந்த ஏனைய இந்திய உதவித் திட்டங்களின் அமுலாக்கங்களின் பலாபலன்களையும் அவர் அறிந்து கொள்ளவுள்ளார்' என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X