2025 மே 05, திங்கட்கிழமை

வீடொன்றுக்கு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளை 4ஆம் குறிச்சியில் உள்ள வீடொன்றின் யன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், இந்த வீட்டின் மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸில் வீட்டு உரிமையாளர் இன்று திங்கட்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற இனந்தெரியாத நபர்கள்; வீட்டின் யன்னல்களை உடைத்துள்ளதுடன், வீட்டின் மீது கழிவு எண்ணெய் ஊற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இதன்போது  தமது வீட்டிற்கு வந்தவர்கள் யார் எனத் தெரியாது எனவும் வீட்டு உரிமையாளர் கூறினார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை களுவாஞ்சிக்குடி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X