2025 மே 05, திங்கட்கிழமை

குடிநீர்த்தாங்கி அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பிரிவிலுள்ள ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு குடிநீர்த்தாங்கி இன்று திங்கட்கிழமை அன்பளிப்புச் செய்யப்பட்டது.

கஷ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும்; நீண்டகாலமாக குடிநீரின்றி மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்தார்கள்.

இதனை நிவர்த்திக்கும் விதமாக அக்ஸஸ் எனப்படும் பொறியியல் நிர்மாண நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து அந்த நிறுவனம் இன்று 2 ஆயிரம் லீற்றர் கொள்ளவுள்ள குடிநீருக்கான தாங்கியை அன்பளிப்புச் செய்துள்ளது.

இந்த நிகழ்வில்  அக்ஸஸ்  நிறுவனத்தின் கணிய அளவையாளர் எம். நூறுல்முபாஸ், செயற்றிட்ட கணிய அளவையாளர் சானக்க விதுரங்கஇ கணக்காளர் சமீர ஜயதுங்க உட்பட பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பாடசாலைக்குத் தேவையான குடிதண்ணீரை வாரத்தில் இருதடவைகள் இனாமமாக வழங்குவதற்கு ஆயித்தியமலைப் பொலிஸாரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாடசாலைத் தலைமை ஆசிரியர் ரீ.செல்வகுமார் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X