2025 மே 05, திங்கட்கிழமை

மதுபானம் விற்ற பெண் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரை கல்முனை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே 45 மது போத்தல்களை விற்பனைக்காக தன் வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு எதிராக  வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே சட்டவிரோதமாக மதுபானம்  விற்ற குற்றத்திற்காக நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி வீதியில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.

அம்பாறையிலிருந்து கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் வந்த போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இந்தப் பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தப் பெண் தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு மதுபானத்தை விற்றுக் கொண்டிருந்த போது திடீரென சுற்றி வளைத்த பொலிஸார் அந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அப்பொழுது மதுபானத்தை  வாங்கிக் கொண்டிருந்த வயோதிபரான வாடிக்கையாளர் அவ்விடத்திலேயே திடீரென மயங்கி விழுந்து விட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.சி.டி. இலங்கக்கோனின் பணிப்பின் பேரில் பொலிஸ் பரிசோதகர் வி.பி. சோமகுமார, பொலிஸ் கான்ஸ்டபிள்களான எஸ். அப்துல்ஜவாத், ஏ.எம். இஸ்மத், ரீ. தஸ்பிக், எல். பியலால் ஆகியோர் இந்த சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X