2025 மே 05, திங்கட்கிழமை

இலுப்படிச்சேனையில் நெல் களஞ்சியசாலை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனையில் பெரிய நெல் கொள்வனவு களஞ்சியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டு  வருகின்றது.

சுமார் ஒரு கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா செலவில் இந்த அரசாங்க நெல் கொள்வனவு களஞ்சியசாலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

பிரதேச விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதும் மற்றும் அதனைக் களஞ்சியப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் இந்தப் பெரும்போக அறுவடையுடன் புதிய நெல் கொள்வனவு களஞ்சியசாலையில்  ஆரம்பிக்கப்படுமென ஏறாவூர்ப்பற்று செங்கலடி பதில் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன் தெரிவித்தார்.

இப்பிரதேச விவசாயிகளின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த நெல் கொள்வனவு களஞ்சியசாலை  கட்டிட வசதி தமக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமென பிரதேச விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X