2025 மே 05, திங்கட்கிழமை

கைதிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் பிள்ளைகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

கைதிகள் தினத்தையொட்டி கைதிகளும் மனிதர்களே  அவர்களுக்கு உதவியளிப்போம் எனும் தொனிப் பொருளில் ஒன்றுகூடலொன்று இடம்பெற்றது.

இலங்கை சிறைக்கைதிகள் நலன்புரி சங்கம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஐந்து கைதிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. அத்துடன் கைதிகளிடையே நடத்தப்பட்ட கலாசார மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் இ.மோனராஜ், மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவர் எஸ்.அருணகிரிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X