2025 மே 05, திங்கட்கிழமை

கரவெட்டிப் பாலத்தின் அவலம்: மக்கள் சிரமம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 17 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி மகிழவெட்டவான் வீதியில் உள்ள கரவெட்டிப் பாலம் சேதமடைந்திருப்பதனால் அந்த பாலத்தினூடான  போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.

மகிழவெட்டவான் நரிப்புல்தோட்டம் நெல்லூருக்கான போக்குவரத்தே தடைப்பட்டுள்ளது.

இப் பாலம் சேதமடைந்ததினால் மட்டக்களப்பில் இருந்து கரவெட்டி ஊடாக மகிழவெட்டவான் நரிப்புல்தோட்டம் செல்லும் பயணிகள் போக்குவரத்து பஸ் கரவெட்டியுடன் திரும்புவதால் இப் பகுதிக்குச் செல்லும் மக்கள் கரவெட்டியில் இறங்கி பல மைல் தூரம் நடந்து செல்லவேண்டியுள்ளதுடன் இப் பகுதிக்கு பஸ் ஊடாக பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதே வேளை தற்போது பெரும் போகச் செய்கைக்கான வயல் பண்படுத்தும் வேலை ஆரம்பித்துள்ள நிலையில் இப் பகுதியில் உள்ள பல ஏக்கர் கணக்கான வயல்நிலங்களை பண்படுத்துவதற்கான உளவு இயந்திரங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆயித்தியமலை சுற்றிவர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப் பகுதி மக்களின் போக்குவரத்து நலன் கருதியம் விவசாயச் செய்கையினை உரிய காலத்திற்கு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தினை உணர்ந்தும் இப் பாலத்தினை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X