2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வாகனம் மோதி வயோதிபர் மரணம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,தேவ அச்சுதன்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேத்தாத்தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை  இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

தேத்தாத்தீவைச் சேர்ந்த எஸ்.ரவிராஜ் (வயது 52) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எம்.மன்சூர் என்பவரின்  வாகனமே குறித்த வயோதிபர்; மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து சம்பவித்தது.

குறித்த வயோதிபர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, குறித்த வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • Mohamed Tuesday, 24 September 2013 06:59 AM

    குறித்த வயோதிபர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X