2025 மே 05, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்த படை வீரர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் படை வீரர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செங்கலடியில் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை இவரைக் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் விடுமுறையில் கண்டியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கடமைக்குத் திரும்பும்போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 720 கிராம் கஞ்சாவை இவர் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தொடர்பில் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X