2025 மே 05, திங்கட்கிழமை

கைதிகள் தினத்தை முன்னிட்டு கொடி விற்பனை

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


கைதிகள் தினத்ததை முன்னிட்டு கைதிகள் தின கொடிகள் விற்பனை நிகழ்வு இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் இடம்பெறவுள்ளது.

இதன் ஒரு கட்டமாக இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு சிறைச்சாலையின் அதிகாரிகள் முதன் முதலாக மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். சாள்ஸ்  மற்றும் மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன் ஆகியோருக்கு மாவட்டச் செயலகத்தில் வழங்கி கொடி விற்பனையை ஆரம்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ. கே. பண்டார, சிறைச்சாலை நலனபுரி சங்கத் தலைவர் ரி. அருணகிரிநாதர் மற்றும் செயலாளர் ஆர். சிறிநிவாசன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X