2025 மே 05, திங்கட்கிழமை

புகையிலைக்கு எதிராக வாழைச்சேனை பிரதேசத்தில் போராட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


புகையிலைக்கு எதிரான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடக் கோரி மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையம்  நாடளாவிய ரீதியில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் மது மற்றும் போதைவஸ்த்து தகவல் நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயம் ஏற்பாடு செய்த நிகழ்வு வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது.

எங்களது பிள்ளைகளைக் காப்பாற்றும் நோக்கில் சிகரட் பெட்டியில் 'உருவப்பட சுகாதார எச்சரிக்கையை' பிரசுரிக்க சுகாதார அமைச்சு எடுத்த தீர்மாணத்தை தாமதப்படுத்தும் சிகரட் கம்பனிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று சிகரட் விற்பனை தவிர்க்கப்பட்டுள்ளது என்ற சுவரொட்டிகளை வர்த்தக நிலையங்களில் ஒட்டி சிகரட் வியாபாரத்தை இன்று தவிர்க்குமாறும் மது மற்றும் போதை வஸ்த்து தகவல் நிலைய ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Sursh Friday, 20 September 2013 04:41 AM

    சிகரெட் கம்பனி எது செய்தாலும் அது மக்களுக்கு தீதாகவேதான் இருக்கும். அதை எதிர்த்து எதை செய்தாலும் அது மக்கள் நல்லதுக்கே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X