2025 மே 05, திங்கட்கிழமை

வாழைச்சேனை பிரதான வீதி புனரமைப்புப் பணியை எஸ்.சந்திரகாந்தன் பார்வை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல் சக்திவேல்


வாழைச்சேனை பிரதான வீதியின் புனரமைப்புப் பணியை  ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.  

வாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த வீதியின் புனரமைப்புப் பணியை அவர் பார்வையிட்டார்.  
வாழைச்சேனை பிரதான வீதியின் புனரமைப்புப் பணி  அண்மைக்காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

வாழைச்சேனை பிரதான வீதியின் ஒரு சில பகுதிகளில்; வாகனத் தரிப்பிட வசதியும் நடைபாதையும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு, வாழைச்சேனை  தமிழ் வர்த்தக சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பிரதான வீதியின் புனரமைப்புப் பணியை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் சென்று பார்வையிட்டார்.

இதன்போது இந்த பிரதான வீதிப் புனரமைப்பின்போது காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பொறியியலாளர்களுக்கு சிவநேசத்துரை சந்திரகாந்தன் பணித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X