2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தென்னந்தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி புத்தர் சிலை வைப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 09 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை பிரதேச  செயலாளர் பிரிவில் தென்னந்தோட்டம் ஒன்றில் தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி அந்த தோட்டத்திற்குள் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை ஸ்ரீ புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியாலேயே இந்த புத்தர் சிலை நேற்று வைக்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புருமூலை கிராம சேவகர் பிரிவில் பாசிக்குடா வீதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் என்பவருக்குச் சொந்தமானதாகும்.

இவரது காணிக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி புத்தர் சிலையை வைத்துள்ளார் என்று கல்குடா பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்துள்ளதாக ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் தெரிவித்தார்.

பிரித்தானிய ஆட்சியில் லெப்பைத் தம்பி ஹாஜியார் என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட இக் காணி பின்னர் அவரது மருமகனான ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் என்பவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு பாடசாலை மாணவர்கள் விளையாடுவதற்கு அனுமதித்த நிலையிலயே இவ் புத்தர் சிலை தென்னந்தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X