2025 மே 03, சனிக்கிழமை

பாலர் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கல்

Super User   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவில் உள்ள 33 பாலர் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் பிரதேச சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு தளபாடங்களை கையளித்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் 11 பாலர் பாடசாலைகளுக்கும்  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 12  பாலர் பாடசாலைகளுக்குமாக ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X